GATE, NEXT போன்று வெளியேறும் போது வடிகட்டும் தேர்வுகளின் பேராபத்து என்னவென்றால், அது சமூகநீதிக் கொள்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் என்பது தான்.
நீ உள்ளே போகும் போது இட ஒதுக்கீடு தருகிறாயா, நான் வெளியே அனுப்பும் முன் எல்லாரையும் fail ஆக்குவேன் என்பது தான் இந்தத் தேர்வுகளின் வன்மம்.
சந்தேகம் இருந்தால் IIT Kanpurல் வடிகட்டப்படும் மாணவர்கள் என்ன சாதி என்று பாருங்கள்.
இது புரிந்ததால் தான் கலைஞர் எட்டாம் வகுப்பு வரை All pass கொண்டு வந்தார். SSLC, +2 தேர்வுகள் எளிமையாக அனைவரும் தேர்வு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டன. அனைவரும் படிப்பறிவு பெறுவது பொறுக்காத மேட்டிமைக்காரர்கள் தரம் இல்லை என்று குதித்தார்கள்.