கேள்வி: கலப்புத் திருமணம் சாதி ஒழிப்புக்கு உதவுமா? அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுக்கலாமா? இது ஆணவக் கொலைகளைத் தடுக்க உதவுமா?
பதில்:
கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியாது. இரண்டில் ஒரு சாதி தொடரும்.
இதே காரணத்தினால், நான் இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தைப் புரிந்து கொண்ட வகையில், சாதி மாறித் திருமணம் செய்தவர்களுக்குப் புதிதாக தனி இட ஒதுக்கீடு தருவது தவறு என்று கருதுகிறேன்.
பெண்களை முன்னேற்ற தனி இட ஒதுக்கீடு இருக்கிறது. பெண்ணைத் திருமணம் செய்கிற ஆண்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்குத் தனி இட ஒதுக்கீடு தாருங்கள் என்று கூற முடியுமா? இது அபத்தமாக இருக்காதா?
ஒரு SC/S ஆண் கலப்புத் திருமணம் செய்து கொண்டால், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு இருக்கிறது. ஒரு SC/ST பெண் கலப்புத் திருமணம் செய்து கொண்டால், அவருக்குப் பிறக்கிற குழந்தைகள் தானாகவே அப்பாவின் சாதிக்கு இருக்கிற இட ஒதுக்கீட்டைப் பெற்று விடும்.
மிக இளம் வயதில், படிப்பு முற்றுப்பெறாமல், சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் கலப்புத் திருமணம் செய்கிற இணைகள் தான் பெரும்பாலும் சாதி ஆணவக் கொலைத் தாக்குதலுக்கு உள்ளாவதைக் காண முடிகிறது.
எல்லாருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சட்டப் பாதுகாப்பு. இவை மூன்றும் இருந்தால், 99% ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். போன நூற்றாண்டுக்கு இந்த நாற்றாண்டு ஆணவக் கொலைகள் குறைந்திருப்பது இதனால் தான்.
அரசின் பாதுகாப்பு, தனிப்பட்ட குடும்பங்களின் முன்னேற்ற நிலை இவை எல்லாவற்றையும் தாண்டி மதம் மாறிப் போனால் கூட சாதி துரத்துகிறது என்பதைத் தான் அண்மையில் தெலங்கானாவில் கொல்லப்பட்ட பிரணயின் முடிவு சொல்கிறது.
சாதி ஒரு சமூக நோய். அதைச் சமூகத் தளத்தில் தான் தீர்க்க முடியும். அதை அரசியல் பிரச்சினையாக்குவது இந்து சமயம் என்னும் உண்மைக் குற்றவாளியைத் தப்பவிடும் சூழ்ச்சியே.
ஆணவக் கொலைகளுக்கு இந்து சமயம் தான் பொறுப்பு.
சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் சாதியைத் தோற்றுவித்துப் பாதுகாக்கிற இந்து சமயத்தைத் தான் ஒழிக்க வேண்டும்.
மற்ற எல்லாம் பூச்சாண்டிகளே.