அரக்கர்கள் யாரையாவது அடித்தால் சற்று சிந்தியுங்கள். இவர் எனக்குத் தெரிந்தவர் வலிக்காமல் அடியுங்கள் என்று வராதீர்கள்.
முருகநோலனைப் பல ஆண்டுகளாக அடித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது தான் அவரது முழு விசம் மக்களுக்குப் புலப்பட்டிருக்கிறது.
தமிழில் வந்த சமூக விரோதப் படங்களின் பட்டியல்:
1. Gentleman – ஊழல் அமைச்சரால் உயர் சாதி மாணவன் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்வதாகக் காட்டியது.
ஆனால், உண்மை இது தான்:
திராவிட ஆட்சிக்குப் பின் ஆயிரக்கணக்கான பின் தங்கிய மாணவர்கள் ஒரு பைசா இலஞ்சம் கொடுக்காமல் குறைந்த செலவில் அரசு மருத்துவமனையில் மருத்துவம் படிக்கிறார்கள். இதற்கான சேர்க்கை வெளிப்படையாக கலந்தாய்வு மூலம் நடக்கிறது. இது ஒரு விசயமா என்று கேட்பவர்கள் வியாபம் ஊழல் என்றால் என்ன, அதில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தேடிப் பாருங்கள்.
2. ரமணா – பணத்துக்கு ஆசைப்படும் தனியார் மருத்துவர்கள் பிணத்துக்கு மருத்துவம் பார்ப்பதாகக் காட்டியது.
ஆனால், உண்மை இது தான்:
தமிழ்நாட்டில் 70% அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் பைசா செலவின்றி நடக்கின்றன. தனியார் மருத்துவமனைக்குப் பணம் இல்லையா அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று ஒரு படம் காட்டியுள்ளதா? விளைவு என்ன? நா. முத்துக்குமார் போல மாற்று மருத்துவம் நாடிச் சாகிறார்கள்.
3. இந்தியன் – அரசு மருத்துவமனையில் இலஞ்சம் தலைவிரித்தாடுவதாகக் காட்டியது.
ஆனால், உண்மை என்ன?
ஒரு முறை அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பாருங்கள்
பார்க்க… முகநூல் உரையாடல்