கேள்வி: ஒரு சாதிப்பிரிவுக்கான Cut-off எப்படி முடிவு செய்யப்படுகிறது? யார் முடிவு செய்கிறார்கள்?
பதில்:
ஒரு படிப்பு அல்லது வேலையில் மொத்தம் 100 இடங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு தர வரிசைப் பட்டியல்கள் உருவாக்குவார்கள்.
ஒன்று சாதியைக் கருத்தில் கொள்ளாமல் General rank list.
இன்னொன்று ஒவ்வொரு சாதிப்பிரிவிலும் ஒரு Community rank list.
General rank listல் முதல் 31 இடங்கள் பிடித்தோர் பொதுப் பிரிவில் “தானாகவே” இடம் பெறுவர். எந்தச் சாதி என்று பார்க்க மாட்டார்கள்.
31 இடங்கள் முடிந்த பிறகு,
அந்தந்த சாதிப்பிரிவுகளுக்கான Community rank listல் எஞ்சி இருக்கும் மாணவர்களை வரிசைப்படுத்துவார்கள்.
எஞ்சியுள்ளவர்களில் BC மாணவர்களில் 30 பேருக்கு “தானாகவே” BC இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கும். இந்த 30வது மாணவர் எடுத்த மதிப்பெண் BC cut-off.
இது போல MBC, SC, ST எல்லோருக்கும் இடம் ஒதுக்குவார்கள். அந்தந்த பிரிவில் கடைசியாக இடம் பிடித்த மாணவர் பெற்ற மதிப்பெண் அந்தப் படிப்புக்கான இந்த ஆண்டு cut-off.
இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் cut-off மாறுபடுகிறது.
இங்கு “தானாகவே” என்று இரு முறை குறிப்பிடுவதன் நோக்கம்:
1. பொதுப்போட்டி இடங்களை தானாகவே சாதி பார்க்காமல் நிரப்ப வேண்டும். ஆனால், வட நாட்டில் இவற்றை ஒட்டு மொத்தமாக ஐயர், ஐயங்கார் போன்ற உயர் சாதிகள் சுருட்டி விடுவார்கள்.
SC, ST, BC, MBC மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் இட ஒதுக்கீட்டின் கீழ் தள்ளுவார்கள். இது சட்டப்படி தவறு.
இப்போது தமிழ்நாட்டிலும் இப்படிப் பொதுப்பிரிவு இடங்களைச் சுருட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.
2. நீங்கள் SC, ST, BC, MBC மாணவராக இருந்தால், இட ஒதுக்கீடு தாருங்கள் என்று வேண்டி விரும்பி கேட்காமலேயே தானாக இந்த அந்த உரிமையைப் பெற்றிருக்க 69% வாய்ப்பு உண்டு. எந்தப் படிப்பு அல்லது வேலையில் இருந்தாலும்.
எனவே, இட ஒதுக்கீடு என்பது யாரோ சிலர் தகுதி இன்றி அனுபவித்தது என்று நினைக்காதீர்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் அதை அனுபவிக்கிறோம் என்று தெரியாமலேயே பயன்பெற்றிருக்க 69% வாய்ப்பு உண்டு.
பார்க்க… முகநூல் உரையாடல்