கேள்வி: ஏன் IIT, கேந்திரிய வித்யாலயா, நவோதயா போல் தரமான கல்லூரிகளையும் பள்ளிகளையும் திராவிட ஆட்சி தரவில்லை?
பதில்:
ஒரு IITயில் 100 பேர் படிக்கிறார்கள். 100க்கு 100 வளாகத்திலேயே வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்கள் 100% வேலை வாங்கித் தருகிறார்கள். எனவே, கூடுதல் தரம் என்று கூறுவார்கள்.
ஆனால், 125 கோடி மக்கள் உள்ள நாட்டில் அவர்கள் படிக்க வைத்தது 100 பேர் மட்டுமே.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒரு இலட்சம் பொறியாளர்கள் படித்து வெளியேறுவதில்,
வளாகத் தேர்விலோ ஓரிரு ஆண்டுகளிலோ 50,000 பேருக்கு வேலை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
50% பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, கல்வி தரம் இல்லை என்ற செய்தியைத் தான் பரப்புவார்களே தவிர,
முதல் 50,000 பேருக்கு நாம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைச் சொல்ல மாட்டார்கள்.
IITயால் வேலை கிடைத்த 100 குடும்பங்கள் வாழ்வது பெரிதா? அண்ணா பல்கலை மூலம் வேலை கிடைத்த 50,000 குடும்பங்கள் வாழ்வது பெரிதா?
தமிழகம் பின்தங்கி இருக்கிறது, தரம் இல்லை என்று இவர்கள் கிளப்பி விடும் அனைத்துச் செய்திகளிலும் மொத்தம் எவ்வளவு என்ற எண்ணைப் பார்க்க மறக்காதீர்கள்.
சதவிகிதக் கணக்குகளில் ஏமாறாதீர்கள்.
இதற்குப் பெயர் Denominator blindness.
7ஆவது Pass பெரிதா? SSLC Fail பெரிதா?
இதை நினைவில் கொண்டால் ஏமாற மாட்டீர்கள்