பதில்: 12 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் Selvakumar Ramachandranஉடன் பேசும் போது, “இந்தியர்கள் கூட சுவீடன் பல்கலைகளில் இலவசமாக உயர்கல்வி படிக்கலாம்” என்ற ஒரே ஒரு வரித் தகவலைச் சொன்னேன்.
பார்த்த வேலையை விட்டு அடுத்த விமானம் பிடித்து சுவீடனுக்கு வந்து விட்டார். இன்று அவர் முனைவர் பட்டம் பெற்று சொந்தமாகத் தொழில் நடத்துகிறார். அவர் இன்னும் 50 பேருக்காவது உயர் கல்வி பற்றி வழிகாட்டி இருப்பார்.
இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் நன்றி கூறும் போது எனக்குக் கூச்சமாக உள்ளது. ஆனால், இதே போல் மற்றவர்களும் தகவலைப் பகிர வேண்டும் என்பது தான் நோக்கம்.
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் எந்தப் படிப்பு படிப்பது, எப்படி வேலை தேடுவது, எப்படி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெறுவது என்று தவிப்புடன் முதல் தலைமுறைப் பட்டதாரிகளும் அவர்கள் பெற்றோர்களும் கேட்கிறார்கள்.
மிக உயர் நிறுவனங்களில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, அவர்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் எப்படி வெற்றி பெறுவது என்று சென்னையில் நல்ல கல்லூரிகளில் படித்தவர்களுக்கே தெரியாது. ஆனால், ஆதிக்கச் சாதிகள் இந்தத் தகவலை மறக்காமல் தங்களுக்குள் மட்டும் பகிர்கிறார்கள். இது தான் அவர்கள் வெற்றிச் சூத்திரம்.
திராவிட இனம் மேலெழ வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்தவற்றை வெளிப்படையாகச் சொல்லித் தர வேண்டும். மிகச் சாதாரணம் என்று நாம் நினைக்கும் ஒரு தகவல் கூட ஒரு நண்பருக்கு மிகப் பெரிய வாய்ப்பைத் தரலாம்.
உங்கள் துறையில், நிறுவனத்தில் எப்படி வேலை வாய்ப்பு பெறுவது என்று ஒரு பதிவு போட்டு மறுமொழிகளில் தெரிவியுங்கள். மிகவும் மகிழ்வேன்.
Information is wealth.
பார்க்க… முகநூல் உரையாடல்