• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / ஏன் திராவிட அரசியலுக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் சங்கிகளைக் திட்டுகிறீர்கள்?

ஏன் திராவிட அரசியலுக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் சங்கிகளைக் திட்டுகிறீர்கள்?

November 15, 2018

கேள்வி: ஏன் திராவிட அரசியலுக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் சங்கிகளைக் திட்டுகிறீர்கள்? திமுக, அதிமுகவை தமிழ்நாட்டில் உள்ள மற்ற எத்தனையோ கட்சிகள் கூடத் தான் விமர்சிக்கின்றன?

பதில்: மற்ற கட்சிகள் திமுக, அதிமுகவைத் திட்டுவது தேர்தல் அரசியலின் கட்டாயங்கள். ஆனால், அவற்றை ஊதிப் பெரிதாக்கி திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று விடாமல் பரப்புவது சங்கி வேலை.

உலகத் தமிழர் ஒற்றுமை, Big boss ஓவியா, சல்லிக்கட்டுத் தமிழன் – இப்படிப் பல்வேறு பெயர்களில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் குழுமங்களுக்குச் செல்லுங்கள். அங்கு பல மொக்கைச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

அங்கு திமுக, அதிமுக, ஏன் பா.ஜ.க.வைத் திட்டி நீங்கள் போடும் செய்திகள் கூட வெளியிடப்படும்.

ஆனால், திமுகவை ஆதரித்து சில பதிவுகள் போடுங்கள். உங்கள் பதிவு நீக்கப்படும். அரசியல் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவீர்கள்.

எதை எதிர்க்க விடுகிறார்கள் என்பதில் இல்லை அவர்கள் அரசியல்.

எதை ஆதரிக்க விடுகிறார்கள் என்பதில் தான் அவர்கள் அரசியல் இருக்கிறது.

இது போல் இயற்கை வேளாண்மை, மருத்துவம், வீட்டுக் கல்வி என்று பல்வேறு பெயர்களில் அவர்கள் கூட்டி வைத்திருக்கும் கூட்டம் முழுக்க திராவிட எதிர்ப்பு மனநிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டும் உத்திகள் தாம்.

இந்தியாவின் மொத்த Fake news supplierகள் சங்கிகள் தான்.

இதை அவர்கள் ஒரு தொழிலாகவே திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதை நான் சொல்லவில்லை. பிபிசி ஆய்வு சொல்கிறது.

சங்கிகள் ஜாக்கிரதை!

(ஆதாரம்)

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1802