• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்?

ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்?

November 27, 2018

கேள்வி: ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்? பீகார், ஜார்க்கண்டோடு போட்டி போட்டு நாம் என்ன கண்டோம்? உலக நாடுகள் அளவு முன்னேற வேண்டாமா?

பதில்:

ஒரு விலங்கை மரத்தில் கட்டி வைத்து ஓடு ஓடு என்றால் அந்தக் கயிற்றின் நீளம் அளவுக்குத் தான் ஓட முடியும்.

இன்னும் ஓட வேண்டும் என்றால்,

ஒன்று கயிற்றை நீளமாக்க வேண்டும். இது மாநில சுயாட்சி.

அல்லது, மரத்தைப் பிடுங்கி எறிய வேண்டும். இது தனி நாடு.

இந்த இரண்டும் சாத்தியமாகாத வரை, தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுவது தான் நேர்மையான ஒப்பீடாக இருக்க முடியும்.

சிங்கப்பூர் கூட மலேசியாவுடன் இருக்கும் வரை வளர்ச்சி அடையவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த நிலையிலும் தமிழகம் கல்வி, மருத்துவத் துறைகளில் கண்டுள்ள வளர்ச்சி என்பது பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத் தக்கது என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னே சொல்கிறார்.

இப்படி முழு சுதந்திரம் இல்லாத நிலையிலும், தில்லிப் பேரரசை அண்டிப் பிழைக்காமல், தமிழக மக்களுக்கு வளர்ச்சியைத் தந்திருப்பதால் தான் திராவிடத்தைக் கொண்டாடுகிறோம்.

திராவிடம் என்பது ஆரியத்தை எதிர்க்கும் சினம் கொண்ட சிங்கம்.

திராவிடச் சிங்கக் குட்டிகள் வளர்ந்து பெரிதாகட்டும் என்ற ஒரே காரணத்துக்காவே, போன தலைமுறை தலைவர்கள் அமைதி காத்தார்கள்.

இவர்களை ஏதோ ஓடத்தெரியாத நொண்டிக் குதிரைகள் என்று நினைத்து அருகில் வந்து தையத் தக்கா என்று வேடிக்கை காட்டினால் சின்னாபின்னமாகி விடுவீர்கள்.

Be careful 

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1848