எல்லோரும் தன் வீட்டில் யாருக்காவது வேலை, படிப்பு கிடைத்தால் தான் இட ஒதுக்கீட்டால் பயன் என்று நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக இருக்கும் இட ஒதுக்கீடு காரணமாக ஒட்டு மொத்த தமிழகமே ஒரு ஆள் விடாமல் பயன் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை.
இட ஒதுக்கீட்டில் படித்து, வேலை பெற்ற அதிகாரிகள் தான் தமிழகத்தின் கடைக்கோடி வரை வரும் திட்டங்களை வகுக்கிறார்கள். அதற்கு இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் தான் உந்து விசையாக இருக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் உங்கள் ஊருக்கு ஒரு மருத்துவமனையும் அதில் ஊசி போட ஒரு மருத்துவரும் இருக்க மாட்டார். ஊருக்கு ஊர் பள்ளிகளும் அதில் வேலை பார்க்க ஆசிரியர்களும் இருக்க மாட்டார்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்