கேள்வி: எப்படி OC பிரிவினர் மட்டும் அதிக இடங்களில் சேர முடிகிறது. தப்பு எங்கு நிகழ்கிறது?
பதில்:
1. பேராசிரியர் போன்ற பணிகளில் அவர்களே 20, 30 வருடங்களாக இருப்பார்கள். அதாவது OBC இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பிருந்தே. அப்போது SC/ST இடங்களைத் தவிர மீதம் 77.5% இடங்களையும் அவர்களே வாரிச் சுருட்டிக் கொண்டார்கள்.
2. இப்போது OBC ஒதுக்கீடு வந்த பிறகு கண்துடைப்பு நேர்காணல்கள் நடத்துவார்கள். தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்று சொல்லி இடங்களை ஆண்டுக் கணக்கில் காலியாக வைத்து அவற்றைப் பொதுப்பிரிவுக்கு மாற்றி விடுவார்கள்.
3. பொதுப்பிரிவுக்கு ஆள் எடுக்கும் போதும் சர்மா, குர்மா என்று சாதிப் பெயர் பார்த்தும் தடவிப் பார்த்தும் உயர் சாதி ஆட்களை மட்டும் தான் எடுப்பார்கள்.
4. பெரும்பாலான மத்திய நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நுழைவுப் பணிகளுக்கு மட்டும் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பதவி உயர்வு என்று வரும் போது சாதி பார்த்துக் கொடுப்பார்கள். அதனால் தான் உயர் பதவிகளில் உயர் சாதிகள் நிரம்பி உள்ளார்கள்.
