நம் மக்கள் தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவது தான் ஊழல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எடுத்த தேனை எவன் உண்கிறான் என்பதைக் கேள்வி கேட்க மறந்து விட்டார்கள்.
இந்தியாவில் மக்களாட்சி மலரும் முன், அனைத்து ராஜாதி ராஜாக்கள் முதற்கொண்டு பிரிட்டிஷ் அரசு வரை மக்களின் உழைப்பை அனைவரும் உறிஞ்சித் தின்றதே ஒரு மாபெரும் ஊழல் தான். ஆனால், அப்போது மந்திரிகளோ அதிகாரிகளோ ஊழல் செய்யவில்லை என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள்.
ஏன் எனில், இந்த மன்னர்களிடம் வேலை பார்த்தது பார்ப்பனர்கள்.
மற்ற யாரையும் படிக்க, வேலை செய்ய விடாமல் ஒட்டு மொத்த வாய்ப்புகளையும் ஒரு சாதியே கைப்பற்றிக் கொண்டது தான் மாபெரும் ஊழல்.
அதிலும் பாவம், புண்ணியம் என்று கதை சொல்லி முட்டாள் ராஜாக்களிடம் இருந்து இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கோயிலுக்குத் தானமாகக் கைப்பற்றிக் கொண்டு அந்தச் சொத்தில் உண்டு கொழுத்ததை எல்லாம் ஆன்மிகக் கணக்கில் எழுதி விட்டார்கள்.
ஊழல் தவறு தான். ஆனால், அதில் கூட அனைத்து மக்களும் பங்கு கொள்ளுமாறு செய்தது மக்களாட்சி தான். ஊழலுக்குத் தண்டனை என்று சட்டம் இயற்றி இருப்பதிலேயே வெளிப்படையான, ஊழல் குறைந்த ஆட்சி நடப்பதும் மக்களாட்சியில் தான்