உங்கள் குடும்பம் வறுமையில் உழன்ற கதையை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்?
எங்கள் இளமையில் வீட்டில் கடிகாரம் இல்லை.
அதிகாலை 5 மணிக்கு எழுந்து தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்றால் கோழி கூவும் சத்தத்தைக் கேட்டு எங்கள் அம்மா எழுப்பி விடுவார். அந்த வீணா போன கோழி 2 மணிக்குக் கூவினாலும் விழித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்போம்.
இத்தனைக்கும் எங்களிடம் நன்செய், புன்செய் நிலங்கள், கேணி, மாடுகள் இருந்தன.
ஆனால், ஒரு கடிகாரம் வாங்கக் கூட காசு புழங்காது. அது ஆடம்பரமாகத் தான் பார்க்கப்படும்.
என்னுடைய முதல் மிதிவண்டியை தாய்மாமாவால் தான் வாங்கிக் கொடுக்க முடிந்தது.
இது புரிந்தால் தான் தமிழ்நாட்டில் ஏழ்மையின் தன்மை என்ன என்று புரியும்.