கேள்வி: இளைஞர்களிடம் திராவிட அரசியலை எப்படி கொண்டு செல்வது? கல்லூரி மற்றும பள்ளி தோழர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் கூட திராவிட அரசியல் பேசுவது இழிவாக பார்க்கப்படும் கேவலமான காலங்களில் இருக்கிறோம். ஆனால் சங்கி அரசியல் பெருமையாக பேசப்படுகிறது. இதை புத்திசாலித்தனமாக எப்படி எதிர்கொள்வது?
பதில்:
தமிழ்நாடு ஒரு வளர்ந்த மாநிலம் என்பதே இங்கு பலருக்குத் தெரியாது. தொடர்ந்து தாழ்வு மனப்பான்மையில் வைத்திருக்கிறார்கள். நம்முடைய வளர்ச்சியே திராவிட இயக்கத்தின் சாதனை தான்.
கடந்த நூறு ஆண்டு கால வரலாற்றுத் தகவல்களை ஆதாரம், புள்ளிவிவரத்துடன் அவ்வப்போது பகிர்ந்து வாருங்கள். என்னுடைய பதிவுகளைப் படித்த பல நண்பர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
திராவிடம் என்றாலே பழைய அண்டிராயர் போட்ட அரசியல்வாதி என்ற பிம்பத்தைத் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மருத்துவர்கள் Yazhini P M, Ezhilan Naganathan போன்ற எத்தனையோ இளைஞர்கள் திராவிடம் பேசுகிறார்கள். அவர்களின் காணொளிகளைப் பகிரலாம்.
பொதுவாக, ஒரு கட்சி சார்பாக இல்லாமல் பகுத்தறிவுக்கு உட்பட்ட பெரியார் சிந்தனைகளைப் பரப்பலாம். ஒரு கட்சி சார்பாக நிலைப்பாடு எடுக்கத் தான் மக்கள் தயங்குகிறார்கள்.
நம் மக்களுக்குப் பெரியார் தான் அலர்ஜி என்றால் Richard Dawkins Quotes பகிருங்கள். ஆங்கிலத்தில் இருந்தால் நம்ம ஆள் ஏற்றுக் கொள்வான். பகுத்தறிவு பரவினால் திராவிடம் தானாக வளரும்.
சங்கிகள் எப்போதும் ஊடகம், ஆன்மிகம் என்று பலமுனைத் தாக்குதல் ஆட்டம் ஆடுகிறார்கள். நாம் தடுப்பாட்டமே ஆடிக் கொண்டிருக்கிறோம். நமது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். #திராவிடம்