இது 30 ஆண்டுகளாக விறகு அடுப்பில் சமைத்ததால் கரி ஏறிய என் வீடு. சமைத்தது என் அம்மா. நாங்கள் பள்ளிக்குப் போகும் போது அவர் விறகு பொறுக்கி கண் எரிய, இருமி இருமி, நாள் முழுக்க ஊதிச் சமைக்க வேண்டும்.
நான் வெளிநாடு போய் சம்பாதித்துக் காசு கொடுத்தாலும் Gas stove வாங்க அவருக்கு மனம் இல்லை. அப்படியே வாங்கினாலும் மாவட்டத் தலைநகரில் இருந்து 35 கிமீ உள்ளே இருக்கும் எங்கள் ஊருக்கு Gas Cylinder வராது.
கலைஞர் இலவச gas stove கொடுத்த பிறகு தான் எங்கள் வீட்டில் விறகு அடுப்பு ஒழிந்தது.
விறகு அடுப்பு எரிப்பதால் வீட்டில் ஏற்படும் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கில் இந்தியாவில் சாகிறார்கள்.
இன்று தமிழகம் Gas stove பயன்படுத்துவதில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களுள் ஒன்று. இது எத்தனைப் பெண்கள், குழந்தைகளின் சாவுகளைத் தடுத்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
இது எதுவுமே புரியாமல், அரசின் மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்தாதீர்கள்.