பதில்:
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் சமூக முதலீடு என்று எத்தனையோ முறை விளக்கி விட்டோம்.
இருந்தும் வரிப்பணம் வீணாவது தான் உங்கள் ஒரே பிரச்சினை என்றால்,
தமிழ்நாடு இந்தியாவுக்குக் கட்டும் ஒரு ரூபாய் வரியில் 40 பைசா தான் திரும்பி வருகிறது. உத்திர பிரதேசத்துக்கு அதுவே 1 ரூபாய் 79 காசாக கிடைக்கிறது.
நம்ம உழைச்சு வட நாட்டுக் காரன் திங்கிறதுக்குப் பதில் நம்ம அண்ணன் தம்பி நல்லா இருக்கட்டுமே?
இந்தியாவில் GDPயில் இரண்டாவது பெரிய மாநிலம் நாம். நம் மாநில மக்கள் ஏழையாகத் தான் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு என்ன தலையெழுத்தா?
GST வந்த பிறகு வரி விதிக்கும் உரிமையும் இல்லை.
தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மாநில சுயாட்சிக்குத் தான் குரல் கொடுக்க வேண்டும்.
குரல் கொடுக்கிற ஒரே கட்சி திமுக!
(ஆதாரம் )