கேள்வி: இட ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால் பொறியியல் படித்த எனக்கு மருத்துவ இடம் கிடைத்து இருக்குமே?
பதில்: இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், இன்னொரு சாதியில் உங்கள் cut-off மதிப்பெண்ணுக்கு கீழே உள்ளவர் இடம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், இப்போது உங்களுக்கு இருக்கும் இடத்தையும் உங்களுக்கு மேலே உள்ளவர் பறித்து இருப்பார்.
இட ஒதுக்கீடு இல்லாத உலகில் கல்லூரியும் இருக்காது. வெளிப்படையான cut-off மூலம் அனுமதி நடத்தும் Single Window Systemம் இருக்காது. இந்த முறைகள் எல்லாமே சமூக நீதியின் பால் அக்கறை உள்ளவர்கள் கொண்டு வந்தது. மருத்துவப் படிப்புக்கு சமசுகிருதம் படித்தால் தான் தகுதி என்று சொன்ன ஊர் இது.
வரலாற்றின் எந்த ஒரு நிகழ்வும் ஒரு பட்டாம்பூச்சி விளைவை ஏற்படுத்தவல்லது. இட ஒதுக்கீடே இல்லாத உலகம் வேறு என்னென்ன விளைவுகளைக் கண்டிருக்கும் என்று நீங்கள் ஊகிக்கத் தேவையில்லை. 19ஆம் நூற்றாண்டில் உங்கள் முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்று பார்த்தால் போதும்.
பார்க்க – முகநூல் உரையாடல்