• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / இந்த 10% பிராடு ஒதுக்கீடு பற்றி அதிகம் படிப்பறிவு கொண்ட பிற மாநில மக்கள், அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன் சார்?

இந்த 10% பிராடு ஒதுக்கீடு பற்றி அதிகம் படிப்பறிவு கொண்ட பிற மாநில மக்கள், அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன் சார்?

July 26, 2019

கேள்வி: இந்த 10% பிராடு ஒதுக்கீடு பற்றி அதிகம் படிப்பறிவு கொண்ட பிற மாநில மக்கள், அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன் சார்?

பதில்:

ஏன் என்றால் சமூக நீதி என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. புரியாது.

சிகப்பாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல், படித்தவன் நியாயமாக நடப்பான் என்ற உங்கள் எதிர்பார்ப்பு தான் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஊரெல்லாம் ஊழல் குற்றவாளி என்றும் படிப்பறிவற்ற முட்டாள் என்றும் நினைக்கிற லாலு பிரசாத் யாதவின் RJD கட்சி தான் வட நாட்டில் இந்த 10% பிராடு ஒதுக்கீட்டை எதிர்க்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் இந்தித் திணிப்பை எதிர்த்தது. நம்மைப் பார்த்து இன வெறியர்கள் என்றார்கள். இன்று தங்கள் மொழிகளை இழந்து விட்டு தமிழர்கள் அன்றே சொன்னார்கள் என்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கும் அதே தான்.

தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்று அறம் பேசிய முன்னேறிய சமூகம்.

மற்றவர்கள் மெதுவாகத் தான் வருவார்கள்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2323