கேள்வி: இத்தனை நாள் இட ஒதுக்கீட்டில் குறைவான மதிப்பெண்கள் பெற்றோர் இடம் கிடைத்த போது சும்மா இருந்தீர்களே! இப்போது ஏன் குதிக்கிறீர்கள்?
பதில்:
இத்தனை நாள் இட ஒதுக்கீட்டை விமர்சித்தவர்கள் என்ன சொன்னார்கள்?
“எங்களுக்குத் தகுதி இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் முன்னேறிய சாதியாகப் பிறந்ததால் எங்களை விடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் வாய்ப்பு பெறுகிறார்கள். இதனால் படிப்பு, வேலையின் தரம் கெடுகிறது, நாட்டின் முன்னேற்றம் பாதிக்கிறது” என்றார்கள்.
இவ்வளவு பேசியவர்கள் இப்போது SC, ST, OBCஐ விட அதிக மதிப்பெண்கள் பெற்று EWS இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தால் தானே அவர்களுக்குக் கூடுதல் தகுதி இருப்பதாகப் பொருள்?
அதை விட்டு விட்டு எல்லாரையும் விட குறைவான மதிப்பெண்கள் பெற்றால், எங்கே போனது தகுதி வாதம்?
ஒரு பேச்சுக்கு, இவர்கள் எல்லாம் ஏழைகளாக இருப்பதால் தகுதிகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால்,
மற்ற சாதி ஏழைகள் எல்லோரும் கூடுதல் மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்களே!
97% மக்கள் வாய்ப்புகளுக்கு முட்டி மோதும் போது, தகுதியே இல்லாமல் சாதியின் பெயரால் 3% மக்கள் 10% வாய்ப்புகளுக்கு பட்டா போட்டால் கடுப்பு ஆகுமா ஆகாதா?
பார்க்க… முகநூல் உரையாடல்