ஒரு உணவு சமைக்கிறீர்கள்.
சமைக்க எவ்வளவு செலவு என்று மட்டும் பார்த்தால் நீங்கள் அடிமட்ட ஏழை.
சமைக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் நடுமட்ட ஏழை.
சமைத்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் பணக்காரர்.
அடிமட்ட ஏழைக்கு விலையில்லா அரிசி, சத்துணவு, குறைந்த விலையில் அம்மா உணவகம் கொடு.
நடுமட்ட ஏழையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, நேரத்தை மிச்சமாக்க மடிக்கணினி, தொலைக்காட்சி, மிதிவண்டி, ஸ்கூட்டி, மிக்சர், கிரைண்டர், Gas அடுப்பு எல்லாம் கொடு.
பணக்காரனிடம் இருந்து வரியை வாங்கி அதை இந்த மக்கள் நலத்திட்டங்களுக்குக் கொடு.
Middle classஐ எப்படி ஏழை என்று சொல்லலாம் என்று நடுநிலை நாராயணன் கேட்பான்.
இரண்டு பேரும் வேலைக்குப் போனால் தான் மாதத்தை ஓட்ட முடியும் என்று இருக்கிற எல்லாருமே ஏழை தான் என்று சொல்.
என் வரிப் பணம் வீணாகிறது என்று பணக்காரன் புலம்புவான்.
நீ குறைந்த கூலி கொடுத்து அவர்களைச் சுரண்டிப் பிழைப்பதால் தான் அவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அந்த இடைவெளியை அரசு இப்படித் தான் நேர் சரி செய்ய முடியும் என்று சொல்.
இது தான் திராவிடப் பொருளாதாரம்