இட ஒதுக்கீடு என்பது ஒரு குழு அடையாளத்துக்குத் தரப்படுவது.
தனி நபருக்குத் தரப்படுவது அன்று.
மகளிர் பேருந்தில் அனைத்து மகளிரும் ஏறலாம்.
பணக்கார மகளிர் எல்லாம் மகளிர் பேருந்தில் ஏறாதீர்கள் என்று சொல்ல முடியுமா?
தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வந்தால்,
ஜெயலலிதா, கனிமொழி, இந்திரா காந்தி எல்லாம் அதில் போட்டி போடாதீர்கள் என்று சொல்ல முடியுமா?
தேவர் மகன் திரைப்படத்தில் கமல் வெளிநாட்டுக்கு எல்லாம் போய் படித்து வந்தார்.
ஆனால், அவரது பங்காளிகள் ஊரில் மண்ணை முட்டிக் கொண்டிருப்பார்கள்.
படிக்காத வடிவேலு சாதிச் சண்டைக்குப் போய் ஒரு கையை வெட்டுக் கொடுத்து விட்டு வருவார்.
கமலின் மனைவி ரேவதி ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார்.
இவர்கள் எல்லோரும் படித்து பண்பட்ட மக்களாக வாழ வேண்டும், அரசு அதிகாரம் படித்த ஒரு சில உயர் சாதிகளிடம் மட்டும் குவிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் இட ஒதுக்கீடு தருகிறார்கள்.
தென் மாவட்டங்களில் படிப்பு, வேலை, தொழில் வாய்ப்பு கூடிய பின் சாதிக் கலவரங்கள் குறைந்திருப்பதைக் காணுங்கள்.
இந்த வாய்ப்புகள் இல்லாத வட மாநிலங்களில் மதக் கலவரங்கள் நடைபெறுவதைக் காணுங்கள்.
கல்வி தான் சாதி ஒழிப்புக்கான ஆயுதம் என்று சொல்லாத தலைவர் இல்லை.
அந்தக் கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
கமலுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்று நினைத்தால்,
அவருடன் சேர்ந்து சுற்றும் நிலமற்ற மற்றவர்களும் படிக்க முடியாது.
எந்த ஒரு குழுவிலும் ஆக உயர் மட்டத்தில் ஒரு சிலர் இருக்கத் தான் செய்வார்கள்.
அதே குழுவின் அடிமடத்தில் இருக்கும் மற்றவர்கள் முன்னேற வேண்டும் என்று தருவது தான் இட ஒதுக்கீடு.
இந்த விளக்கம் போதும்;
சின்னக் கவுண்டர் படத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் சுகன்யா, கழுதை மேய்த்துக் கொண்டிருக்கும் செந்தில், கவுண்டமணி வரைக்கும் போக வேண்டாம் என்று நினைக்கிறேன்.
பார்க்க – முகநூல் உரையாடல்