1990கள் வரை தீபாவளி அன்று பண்ணையார்கள் வீடுகளில் பலகாரம் வாங்க அக்கம் பக்கம் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகள் வருவார்கள்.
ஏன் அன்றாடம் கூட இரவு வேளைகளில் எஞ்சிய உணவை வாங்கிக் கொள்ள தட்டை ஏந்திக் கொண்டு வருவார்கள்.
நாட்டாமை, சின்னக் கவுண்டர் என்று நீங்கள் பார்க்கிற பண்ணையார் படங்களில் எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை அளிக்கும் காட்சிகள் தவறாமல் வரும்.
இன்று இந்த வேலையை அரசு செய்கிறது. மக்கள் பிச்சையாக இல்லாமல் உரிமையாக வாங்கிக் கொள்கிறார்கள்.
யாரும் தங்களை அண்டிப் பிழைப்பதில்லை, அனைவரும் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந்து தங்களை விட வசதியாக வாழ்கிறார்கள் என்று அரற்றும் எத்தனையோ பண்ணையார்களை நானே பார்த்து இருக்கிறேன்.
மக்கள் பிச்சையாக வாங்கிக் கொண்டிருந்ததை பெருமையான பொற்காலம் என்னும் நீங்கள், அவர்கள் அரசிடம் இருந்து உரிமையாக வாங்கிக் கொள்வதை இழிவு செய்கிறீர்கள்.
ஆண்டான் அடிமைக் காலம் மீண்டும் வர வேண்டும் என்பது தான் உங்கள் உள்மன அரிப்பா?