அழகுலட்சுமி
2019ல் எடுத்த நீட் மதிப்பெண்ணை 2018லும்
2018ல் எடுத்ததை 2017லும் பெற்றிருந்தால்
அவர் மருத்துவர் ஆகியிருக்கக் கூடும்.
இப்போது இவர் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் “போதவில்லை” என்கிறார்கள். அதாவது, மருத்துவம் படிப்பதற்கான “போதிய தகுதி” இவரிடம் இல்லையாம்.
ஆனால், இதே மதிப்பெண்ணுடன் போன ஆண்டு மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் தரமான மருத்துவர்களாம்.
ஆண்டுக்கு ஆண்டு இப்படி நிலவரம் மாறுவது போலத் தான்,
இட ஒதுக்கீட்டின் மூலம் படிக்கும் போது ஒரு சில மதிப்பெண்கள் நுழைவுத் தகுதி மாறுபடுகிறது.
ஆனால், அனைவரும் ஒரே கல்லூரி, ஆசிரியர்களின் கீழ் படித்து ஒரே தேர்வை எதிர்கொண்டு தானே வெளியே வருகிறார்கள்?
இதில் எங்கே குறைகிறது தரம்!
நம்மிடம் குறைவாக இருப்பது ஒன்றே ஒன்று தான்!
அது, உரிமை!
மாநில சுயாட்சி உரிமை!
இப்போது உள்ள அடிமை நிலையிலேயே, இந்தியாவிலேயே மிக அதிகமாக,
3,000+ அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை உருவாக்கத் தெரிந்த நமக்கு,
இன்னும் 10,000 இடங்களை உருவாக்கத் தெரியாதா?
ஆனால், அப்படி உருவாக்குவதற்கான உரிமை நம்மிடம் இல்லை.
ஊருக்கு ஊர் தேவைக்கு ஏற்ப பள்ளிகளையும் கலைக்கல்லூரிகளையும் உருவாக்க முடிந்த நமக்கு,
போதுமான மருத்துவக் கல்லூரிகளையும் இடங்களையும் உருவாக்கும் உரிமை இல்லை.
ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அனுமதியை Medical Council of India தான் தருகிறது.
இந்த உரிமையை Tamilnadu Medical Council பெற வேண்டும்.
நீட் போன்ற தேர்வுகள் இல்லாமல் மாணவர்கள் நுழைவுக்கான தகுதியை +2 போன்ற தேர்வுகள் கொண்டு நாமே வகுத்துக் கொள்ளும் உரிமை வேண்டும்.
இந்த அடிப்படை அரசியலைப் பேசாமல்,
நம்மை
மாநிலக் கல்வி எதிர் CBSE கல்வி,
அரசுப் பள்ளி எதிர் தனியார் பள்ளி,
Coaching எதிர் Coaching இல்லாதவர்கள்,
என்று சுற்றலில் விட்டுள்ளார்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்