கேள்வி: தமிழக அரசு அருந்ததியர்களுக்கு வழங்கும் உள் இட ஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்துகிறது?
பதில்:
* SC பிரிவுக்கான 18% இட ஒதுக்கீட்டில் 3% இடங்களை அருந்ததியர்களுக்கு (SCA) உள் ஒதுக்கீடாகத் தருகிறார்கள்.
* கூடுதல் எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர்கள் இருந்தால், 3% உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மேற்பட்டு உள்ள அனைத்து SC இடங்களுக்கும் அவர்கள் போட்டியிடலாம். அதே போல், போதுமான எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர் இல்லாவிட்டால், அந்த இடங்கள் அதே ஆண்டு மற்ற SC சாதியினருக்கு வழங்கப்படும்.
* M.E, M.Tech, MD, MS போன்று ஒரு சில இடங்களே உள்ள மருத்துவம், பொறியியல் முதுகலைப் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் வெவ்வேறு படிப்புகளில் SCA இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. நீங்கள் விரும்பும் படிப்பில் SCAவுக்கு இடம் ஒதுக்கவில்லை எனில், SC பிரிவின் கீழேயே நீங்கள் போட்டியிடலாம். நீங்கள் SCA என்பதால் உங்களுக்கு இடம் இல்லை என்று யாரும் திருப்பி அனுப்ப முடியாது.
ஆக, பொதுப்பிரிவு, SC, SCA என்று மூன்று இடங்களுக்கும் அருந்ததியர்கள் போட்டியிடலாம்.
இது மற்ற SC சாதிகளின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்காதா என்று சிலர் கேட்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது தான் சமூக நீதியின் அடிப்படை. இந்த அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கினால், பொதுப்பிரிவில் உள்ளவர்கள் இதே கேள்வியை BC/MBC/SC/ST பிரிவில் உள்ளவர்களைப் பார்த்து கேட்க முடியும்.
BC பிரிவின் கீழ் இசுலாமியர்களுக்கு வழங்கப்படும் உள் இட ஒதுக்கீடும் இதே போன்ற முறையில் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முன்பு இந்த உள் இட ஒதுக்கீடு குறித்து பிழையான புரிதலைக் கொண்டிருந்ததால் உள் ஒதுக்கீடு தவிர BC, SC இடங்களுக்குப் போட்டியிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். தவறுக்கு வருந்துகிறேன்.
தகவலுக்கு நன்றி: Jagatheesan Natarajan
பார்க்க – முகநூல் உரையாடல்