கேள்வி: அரசு மருத்துவர்கள் சொந்த கிளினிக், பிற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதைத் தடை செய்யலாமே?
பதில்:
மருத்துவர்களின் திறமைக்கும் உழைப்புக்கும் அரசு தரும் சம்பளம் என்பது உண்மையிலேயே பிச்சைக் காசு தான்.
ஏதோ இந்த நாடு தங்களை மருத்துவம் படிக்க வைத்ததே என்ற நன்றிக் கடனுக்குத் தான் அவர்கள் அரசுப் பணியில் இருக்கிறார்கள்.
அரசுப் பணியில் செலவிடும் நேரம் போக எஞ்சிய நேரத்தில் கூடுதலாக தனியாக உழைத்தே அவர்கள் சமூகத்தில் உள்ள மற்ற பல மக்களுக்கு இணையாக தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் அரசுப் பணி தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது என்றால்,
MD, MS, M. Ch படித்த எல்லா உயர் சிகிச்சை மருத்துவர்களும் அரசு வேலையை விட்டு விடுவார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குப் பேராசிரியர்கள் வர மாட்டார்கள்.
அப்புறம், இருக்கிற பள்ளிகளை எல்லாம் மூடி விட்டு நூலகங்கள் ஆக்குகிறோம், அவற்றைப் பார்த்துக் கொள்ள அங்குள்ள ஆயாக்களே போதும் என்று அமைச்சர் சொன்னாரே…
அது போல் இருக்கிற அரசு மருத்துவமனைகளை எல்லாம் மூடி விட்டு,
தலைவலி, காய்ச்சலுக்கு மட்டும் மருந்து தருவார்கள்.
எப்படி வசதி?
பார்க்க… முகநூல் உரையாடல்