• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / அரசு தரும் மடிக்கணினியில் எல்லாரும் பாட்டு கேட்கிறார்கள். படம் பார்க்கிறார்கள். இது எல்லாம் வீண் இல்லை?

அரசு தரும் மடிக்கணினியில் எல்லாரும் பாட்டு கேட்கிறார்கள். படம் பார்க்கிறார்கள். இது எல்லாம் வீண் இல்லை?

November 10, 2018

பதில்: நாம் எல்லாரும் காசு கொடுத்து கணினியும் இணையமும் வாங்கிய பிறகு என்னவெல்லாம் செய்வோமோ அவை எல்லாவற்றையும் அரசின் பயனாளிகளும் செய்யலாம்.

நீங்கள் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கினால் கூட எது நல்ல பயனைத் தரும் என்று தெரியாது. அதற்காகத் தான் கலவையாகப் பல நிறுவனப் பங்குகளை வாங்குகிறீர்கள். இது பங்குச் சந்தை முதலீடு.

நாளைய சமூகத்தில் யார் சச்சின், ஏ. ஆர். ரஹ்மான், கலாம் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு இன்று எல்லா வாய்ப்புகளும் தேவை.

அரசு வழங்கும் கணினியில் 100 பேர் படம் பார்க்கலாம். சிலர் விற்கலாம். ஆனால், நாளை IAS படிக்கும் ஒருவருக்கு இன்று கணினி கிடைப்பது முக்கியம்.

இந்த வசதிகளைப் பயன்படுத்தி சமூகத்தில் அடுத்த நிலைக்குச் செல்பவர்கள் வட்டியும் முதலுமாக இந்த அரசுக்கும் சமூகத்துக்கும் இந்தச் செலவுகளின் பயனைத் திருப்பித் தருவார்கள்.

இது சமூக முதலீடு.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1722