• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா?

அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா?

November 10, 2018

கேள்வி: அடித்தட்டு மக்கள் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா?

பதில்:

இந்தியாவில் தொலைகாட்சிகள் வைத்திருப்போர் 47% மட்டுமே.

GDPல் இந்தியாவின் முதன்மை மாநிலமான மராட்டியத்தில் இது 56% தான்.

ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு இதனை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடித்து விட்டது.

தொலைக்காட்சிகள் இருக்கும் வீடுகளில் குடும்ப வன்முறை குறைகிறது, வாழ்க்கைத் தரம் கூடுகிறது என்று பல பல சமூக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

(ஆதாரம்)

(ஆதாரம்)

(ஆதாரம்)

தொலைக்காட்சி என்பது கேளிக்கை வசதி மட்டும் இல்லை. படிப்பறிவற்ற எண்ணற்ற மக்களுக்கு அது அறிவுத் தொடர்பாடலுக்கான அடிப்படைக் கருவி. அதனால் தான் 1990களிலேயே ஒரு கிராமத்துக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை அரசு பஞ்சாயத்து டிவி என்ற பெயரில் அளித்தது.

இன்று தமிழில் புதிய ஊடக நிறுவனங்கள் வருகின்றன. எத்தனையோ பெட்டிக் கடைகளில் Disovery, History, Animal Planet நிகழ்ச்சிகளைத் தமிழில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தொலைக்காட்சிகளைத் தமிழில் பார்க்க முடிவது பெரும் அறிவுப் புரட்சி என்றே சொல்லாம்.

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

தனி உடமை கொடுமைகள் தீர

தொண்டு செய்யடா

நீ தொண்டு செய்யடா

தானாய் எல்லாம் மாறும் என்பது

பழைய பொய்யடா

எல்லாம் பழைய பொய்யடா”

பெரியாரை மட்டும் கண்டிராவிட்டால் தான் ஒரு கம்யூனிஸ்டாகி இருப்பேன் என்று கலைஞர் பல முறை சொல்லி இருக்கிறார்!

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், பொருளாதாரம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1724