• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / அரசு சமூக ஊடகங்களை கண்காணிக்கிறது

அரசு சமூக ஊடகங்களை கண்காணிக்கிறது

March 14, 2019

அரசு சமூக ஊடகங்களை கண்காணிக்கிறது. ஆகவே, அரசியல் பேசாதீர்கள் என்று ரொம்ப நாளாகப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது ரங்கராஜ் பாண்டே போன்றோர் ஒரு படி மேலே போய் அரசுக்கு எதிரான கருத்துகள் பாக்கிஸ்தானில் இருந்து வருகிறது, ஒரு டுவீட்டுக்கு 10 ரூபாய் பணம் கட்டுவது போல் மாற்ற வேண்டும் என்று எல்லாம் கதறுகிறார்கள்.

இவை எல்லாமே இணையத்தில் மோடி எதிர்ப்பு கருத்துகள் பரவுவதைத் தடுக்கவே.

Non-veg சாப்பிடுவதைத் தடுக்க முடியாவிட்டால் Non-vegல் விசம் இருக்கிறது என்று பயம் காட்டும் அதே சங்கி டெக்னிக்.

1. பொய்களைப் பரப்பாதீர்கள்.
2. கண்ணியமாக எழுதுங்கள்.

இந்த இரண்டு எளிய விதிகளை மட்டும் பின்பற்றினால் உச்சநீதிமன்றக் கூண்டில் நின்று கூட உங்கள் முகநூல்/டுவிட்டர் பதிவுகளை சத்தம் போட்டுப் படிக்கலாம்.

#GoBackModi போட்டவர்களை எல்லாம் அடைத்து வைக்கும் அளவுக்குப் பெரிய சிறை இன்னும் கட்டப்படவில்லை.

ஆனால், நீங்கள் அரசியல் பேசத் தயங்கினால் இந்தியாவே ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாறும்

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1980