கேள்வி: அரசியல் Vs NGOத்தனம் வேறு பாடு என்ன?
பதில்:
GST கொண்டு வருகிறார்கள். மாநில அரசு வரி விதிப்பை விட அந்த முறை நன்றாக இருந்தால் எல்லா தொழில் நிறுவனங்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.
நாளையே சீனாக்காரன் நம்மை அடிமைப்படுத்தி அதை விடச் சிறப்பான வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்தால் அதையும் ஏற்றுக் கொள்வார்கள்.
தேசியக் கல்விக் கொள்கை, தேசியத் தேர்வு என்று கொண்டு வரப்படுகிறவற்றில் அனைத்துக் கூறுகளும் நன்றாக இருந்தால், இப்போது பேசுகிற கல்வியாளர்கள், NGOக்கள் அனைவரும் ஆவோஜி ஆவோ, பாவ் பாஜி காவோ என்று இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.
ஆனால், ஒரு கொள்கை நன்றாக இருந்து இன்னொரு கொள்கை தீதாக இருந்தால் அதை மாற்ற நமக்கு ஒரு உரிமையும் இருக்காது.
எனவே,
“இதை எல்லாம் சொல்ல நீ யாருடா?
நல்லதோ கெட்டதோ எங்கள் இனத்தின் தலைவிதியை முடிவு செய்ய எங்களுக்கு உரிமை வேண்டும், அதற்கான அறிவும் தகுதியும் அனுபவமும் எங்களுக்கு இருக்கிறது.
எங்களே நாளங்களே ஆண்டு கொள்கிறோம்”
என்று உரிமைக் குரல் எழுப்புவதற்குப் பெயர் தான் அரசியல்.
ஒரு NGOவும் இந்த அரசியலைப் பேசாது. பேசினால் தூக்கிப் போட்டு மிதி மிதி என்று மிதிப்பார்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்