கேள்வி: உதயநிதி ஒரு பிரச்சினையே இல்லையா?
பதில்:
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு Vs உதயநிதி
NEET Vs உதயநிதி
எட்டுவழிச்சாலை Vs உதயநிதி
ஒரு ஆண்டுக்கு மேலாக 18 சட்டமன்றத் தொகுதிகள் MLA இல்லாமல் இருக்கும் ஜனநாயகப் படுகொலை Vs உதயநிதி
இன்னும் இது போல் எத்தனை Vs வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றில் உதயநிதி தான் முக்கியமான பிரச்சினை என்று விடை வந்தால், வாருங்கள் பேசுவோம்.
நாட்டுப் பிரச்சினைகளைப் பேசுவது தான் அரசியல். ஒரு கட்சியில் யார் அடுத்த தலைவராக வருகிறார் என்பது அந்தக் கட்சியின் பிரச்சினை. நீங்கள் திமுககாரராக இருந்து இது தான் உங்கள் பிரச்சினை என்றால் திமுக பொதுக்குழுவில் போய் பேசவும்.
பலரும் மக்களாட்சி என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அரசர்களோ வாரிசுகளோ ஆளக்கூடாது என்று மக்களாட்சி சொல்லவில்லை. அரசனே ஆனாலும் அவன் மக்களின் வாக்குகளை வாங்கினால் தான் ஆள முடியும். இல்லையெனில், வீட்டுக்குப் போக வேண்டும் என்பது தான் மக்களாட்சி.
ஒரு தொழிலதிபர் தன் வாரிசுக்குப் பொருளாக முதலைத் தருவது போல் பன்னெடுங்காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு குடும்பமும் தங்கள் வாரிசுகளுக்கு ஒரு அரசியல் முதலைத் தரவே செய்யும். இது தவிர்க்க இயலாத இயற்கையின் நியதி. Bush, Trudeau, Lee, Castro என்று உலகம் எங்கும் அனைத்து சித்தாந்தங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளிலும் இதனைக் காணலாம்.
எந்த ஒரு வாரிசுக்கும் அரசியல் நுழைவு என்பது ஒரு passport தான். தகுதி இல்லாத தலைவனை அவருக்குக் கீழே இருப்பவர்கள் ஒரே நாளில் கவிழ்த்துவிடுவார்கள். அல்லது, அவரோடு சேர்ந்து கட்சியும் கரையும். இது அவர்களின் தலைவலி.
காலம் தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ள உண்மையான தலைவன், தனக்கு எதிராக உள்ள அத்தனை வாரிசுகளையும் முறியடித்து மேல் எழுவான். கவலைப்படாதீர்கள்.
நாட்டைக் கூட்டியும் காட்டியும் கொடுக்கும் ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் மேல் பொருளற்ற விமர்சனங்களை வைப்பது அவர்களுக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்கவே.
கிட்னி பத்திரம்