கேள்வி: ஜப்பான் ,சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல தமிழகமும் பொறியியல், மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழையே முழுக்க முழுக்க கல்வி மொழியாகப் பயன்படுத்துமாறு திராவிட கட்சிகள் செய்திருக்கலாமே?
பதில்: ஜப்பான், சீனா, ஜெர்மனி எல்லாம் நாடுகள்.
தமிழ்நாடு ஒரு மாநிலம்.
மாநில சுயாட்சி இல்லாமல் திராவிடக் கட்சிகள் மட்டும் இல்லை எந்தக் கட்சியாலும் இதைச் செய்ய முடியாது. தமிழைக் கட்டாயம் ஒரு மொழிப் பாடமாகப் படிக்க வேண்டும் என்று சொன்னாலே நீதிமன்றம் முடக்கும். இங்கு அரசியல் சட்டம் அப்படித் தான் உள்ளது.
தனி நாடு இல்லாமல் முழுக்க உள்ளூர் மொழியில் படிப்பதும் வேலை வாய்ப்புகளுக்கு உதவாது. கல்வி தவிர பொருளாதாரக் கொள்கைகளையும் வகுக்கும் சுதந்திரம் இருந்தால் தான் முற்று முழுதான தாய் மொழிக் கல்வி உதவும்.
இல்லையேல், அதுவே தீமையாக முடியலாம். மேற்கு வங்காளத்தில் நடந்த கதையை இங்கே பாருங்கள்.