கேள்வி: அத்தனை ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த கலைஞர் ஏன் அதைச் சாதிக்கவில்லை? இதைச் சாதிக்கவில்லை?
பதில்:
கலைஞர் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது தான் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார்.
கலைஞரை நீங்கள் எவ்வளவு சுயநலம் மிக்க, சமூக அக்கறை அற்ற, பதவி வெறி பிடித்த தலைவர் என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள்.
அப்படிப்பட்ட ஒருவர், தன் சொந்த மகளைக் கூடவா ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிறையில் கிடந்து வாட விடுவார்?
அரசியல் என்பது ஆடுபுலி ஆட்டம்.
என்ன தான் கூட்டணியில் இருந்தாலும் ஒரு காலத்தில் திமுக தான் காங்கிரசுக்கு எதிரி. இன்றும் ஒரு வகையில் தேர்தல் அரசியல் போட்டியாளர்கள். மாற்றி மாற்றி காய்களை நகர்த்தி செக் வைத்துக் கொண்டிருப்பார்கள். இது கட்சிகளுக்கு இடையே உள்ள இயங்கியல்.
இன்னொன்று, ஒரு அரசு எப்படி இயங்குகிறது என்ற புரிதல்.
மோடி புதிதாக பிரதமர் ஆன போது தில்லியின் அரசியலைப் பார்த்துத் தலைச் சுற்றிப் போனார். இங்கு ஒரு அரசு இல்லை. பல்வேறு குட்டிக் குட்டி அரசுகள் இருக்கின்றன என்றார்.
சில விசயங்களை ஒரே ஒரு தொலைப்பேசி உரையாடலில் சாதிக்கலாம். OBC இட ஒதுக்கீடு போன்ற சில விசயங்களை வி.பி.சிங் போல ஆட்சியே கவிழ்ந்தாலும் சரி என்று தான் சாதிக்க முடியும். அவ்வளவும் செய்த பிறகும், நீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு முட்டுக் கட்டை போடும்.
இதை எல்லாம் தாண்டித் தான் அரசியலில் ஏதாவது சாதிக்க முடியும்.
அப்படி அவர் ஏதாவது சாதிக்காமல் விட்டுப் போயிருந்தால், ஏழு கழுதை வயதான நாம் தான் அதை நிறைவேற்ற வேண்டும்!
என் வயதில் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட்டார்.
எல்லாவற்றையும் யாரோ நிறைவேற்றுவார்கள், நாம் நோகாமல் நொங்கு திங்கலாம் என்ற காலம் முடிந்து விட்டது!
பார்க்க… முகநூல் உரையாடல்