• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / அது தான் நீட் வந்து 2 செட் மாணவர்கள் தேர்வு எழுதி விட்டார்களே! இன்னும் என்ன போராட்டம்?

அது தான் நீட் வந்து 2 செட் மாணவர்கள் தேர்வு எழுதி விட்டார்களே! இன்னும் என்ன போராட்டம்?

July 14, 2019


கேள்வி: அது தான் நீட் வந்து 2 செட் மாணவர்கள் தேர்வு எழுதி விட்டார்களே! இன்னும் என்ன போராட்டம்? இதனை ஏற்றுக் கொள்வது அல்லவா புத்திசாலித் தனம்?

பதில்:

1938ல் ராஜாஜி இந்தியைத் திணித்தார். 1965 வரை பல உயிர்களைக் கொடுத்துப் போராடி தான் அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது.

1920களில் நீதிக் கட்சி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. 1950ல் இந்திய அரசியல் சாசனம் அதனைப் பறித்த போது, போராடித் தான் மீட்டெடுத்தோம்.

அரசியல் உரிமை மீட்பு என்பது பல ஆண்டுகள், ஏன் பல நூற்றாண்டுகள் கூட போராடித் தான் மீட்டெடுக்க முடியும்.

இதை எல்லாம் புரிந்து வாழ்நாள் முழுக்க இதற்காகப் பேசக் கூடியவர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறோமே தவிர,

காலையில் சாலை மறியல் செய்தால், மாலையில் தாசில்தார் வந்து வாக்குறுதி கொடுப்பார் என்பது மாதிரியான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவில்லை.

அதனால், இனிப் போராடிப் பயன் இல்லை என்று நாங்கள் சோர்வடைவோம் என்று இலவு காத்திருப்பவர்களுக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால்:

We know your effing mind game! Stop playing your dirty tricks with us.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், அரசியல், நீட்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2220