கேள்வி: அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
பதில்:
ஆம், அதிமுக திராவிடக் கட்சி தான்.
ஆனால், ஜெயாவும் எம்ஜிஆரும் இருந்த வரை மீண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்க வேண்டுமே என்ற பயமாவது அவர்களுக்கு இருந்தது.
ஆனால், இப்போது இருக்கும் கட்சி தலையில்லாத முண்டமாக கண்டவர்களை எல்லாம் காவு கேட்கிறது.
மீண்டும் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் கிடைத்தவரை கொள்ளை அடிக்கலாம் என்று திரியும் மாப்பியா கும்பலே இப்போது அதிமுகவை ஆட்டுவிக்கிறது.
இந்தக் கட்சியை நெறிப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்து டெல்லிக்கு அடிபணியாமல் இருக்கும் தலைவர் எவரும் கொடநாட்டு மலை மீது நின்று பார்த்தாலும் தெரியவில்லை.
ஆகவே, இந்தக் கட்சி அழிவதே தமிழகத்துக்கு நல்லது.
ஆனால், அது விட்டுச் செல்லும் வெற்றிடத்தை காங்கிரசு, பாஜக போல் தேசியக் கட்சி பிடிப்பதும் தமிழகத்துக்குக் கேடு தான்.
திமுகவுக்கு இணையாக அரசியல் செய்ய இன்னொரு நல்ல திராவிடக் கட்சி எழுவது காலத்தின் கட்டாயம்.
யார் கண்டார்கள்? அரக்கர்கள் ஒரு நாள் அந்தப் பணியைச் செய்யலாம்