கேள்வி: அதிமுகவுக்குப் பதில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் மட்டும் எப்படி நீட் விலக்கு பெற்றிருக்கும்? இதே சட்டம், இதே நீதிமன்றம் தானே?
பதில்:
இதே அதிமுக இதே பாஜகவுடன் உரையாடி சல்லிக்கட்டு மாட்டைத் திறந்து விட மட்டும் சட்டம் இயற்றவில்லையா?
இதே அதிமுக தானே ஜெயலலிதா உயிரோடு இருக்கிற வரை நீட், GST, உதய் மின்திட்டம் எல்லாம் எதிர்த்தது? அவரை மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டு அல்லவா தில்லிக்குச் சென்று அமைச்சர்கள் அடிமை சாசனம் எழுதித் தந்தார்கள்?
திமுக ஆட்சியிலேயே இல்லாத போது தான் இந்தித் திணிப்பை முறியடித்தோம்.
அரசியல் வெற்றிகள் சட்டப்போராட்டம் தாண்டி மக்கள் போராட்டம், இரு தரப்புப் பேச்சுவார்த்தை என்று பல வழிகளிலும் பெறப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்றத் தீர்ப்பு இல்லாமலேயே கலைஞர் காவிரி நீர் கொண்டு வந்தார்.
இப்போதுள்ள நீட் சிக்கலைச் சட்டச் சிக்கலாகப் பார்ப்பதற்கு முன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள அதிமுக அரசுக்கு நீட் விசயத்தில் அரசியல் உறுதி இல்லை. உறுதி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை 1% கூட நாணயமும் இல்லாமல் ஒரு சட்டம் நிராகரிக்கப்பட்டதையே இரண்டு ஆண்டுகளாக மக்களிடம் சொல்லாமல் ஏமாற்றி விட்டார்கள்.
இந்தத் துரோகத்தைப் பற்றிப் பேசாமல் அதிமுகவும் திமுகவும் ஒன்று என்பது போல் உரையாடலைக் கட்டமைக்கப்பவர்கள்
சங்கிகளுக்கு ஆள் சேர்க்கும் கூட்டம் என்பதை மறவாதீர்!
பார்க்க… முகநூல் உரையாடல்