கேள்வி: என் பக்கத்து வீட்டில் ஒரு ஏழை அர்ச்சகர் இருக்கிறார். God promise. அவருக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது?
பதில்:
யாருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க உன் பக்கத்து வீட்டைப் பார்க்காதே.
அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்குச் செல்.
அங்கு முழுக்க ஆண்களாக இருக்கிறார்களா? பெண்களுக்கு இடம் கொடு.
அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்,
அங்கு முழுக்க இந்துக்களாக இருக்கிறார்களா? இசுலாமியர்களுக்கு இடம் ஒதுக்கு.
அருகில் உள்ள மத்திய அரசு அலுவலகத்திற்குச் செல்.
அங்கு முழுக்க இந்திக்காரர்களாக இருக்கிறார்களா? உன் சொந்த மாநில மக்களுக்கு இடம் வேண்டும் என்று கேள்.
அதிகாரத்தில் யார் பங்கெடுக்கவில்லையோ அவர்களுக்குத் தான் இட ஒதுக்கீடு.
ஏற்கனவே நீக்கமற நிறைந்திருப்பவர்களுக்குத் தராதே.
அருகில் உள்ள மாநிலத் தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பல்கலைக்கழகம், வங்கி தலைமை அலுவலகம், தூதரகம், கார்ப்பரேட் நிறுவனத் தலைமையகம் எங்கு வேண்டுமானாலும் சென்று பார்.
அங்கு முழுக்க உன் பக்கத்து வீட்டு அர்ச்சகரின் சொந்தக்காரர்கள் தான் நிறைந்து இருக்கிறார்கள்.
Mother promise.
பார்க்க – முகநூல் உரையாடல்