மாநில சுயாட்சி என்றால் என்ன?
கலைஞர் முதல்வராகப் பதவியேற்ற போது St. George கோட்டையைச் சுற்றி முளைத்துள்ள புல், பூண்டுகளை வெட்டி சுத்தமாக்கச் சொல்கிறார்.
அதிகாரிகள் சொன்ன பதில்:
கோட்டை இராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. புல் வெட்ட மத்திய அரசின் அனுமதி தேவை.
கலைஞர் சொல்கிறார்:
இப்போது அதில் ஒரு பாம்பு நெளிந்தால் கூட அதை அடிக்க மத்திய அரசு அனுமதி வேண்டுமா?
அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.
5 மாதம் கழித்து அனுமதி கிடைக்கிறது.
இப்படிப் பட்ட உப்புசப்பில்லாத அதிகாரத்தை வைத்துக் கொண்டு தான் மாநில அரசை நடத்துகிறார்கள்.
நம்ம ஊர்க்காரர்களோ திராவிடம் என்ன சாதித்தது என்று கேட்கிறார்கள்!
கலைஞரின் குரலில் மாநில சுயாட்சி உரை!
பார்க்க… முகநூல் உரையாடல்