என் இரு நண்பர்கள் அரசு மருத்துவர்கள்.
ஒருவர் MBBS முடித்து PG Diploma மாணவராக இருந்த காலம். திருமணம் முடித்த புதிது. இவர் ஒருவர் வருமானம் தான். மாதம் ஒரு முறை மட்டும் சரவணபவன் போய் தயிர் வடை சாப்பிட்டால் அது தான் Treatஆம்.
இன்னொருவர் உயர் சிகிச்சை மருத்துவர். அவருடைய மனைவியின் வருமானம் நின்றுவிட்டது.
தன்னுடைய மாதாந்திர கணக்கு வழக்குகளை எல்லாம் என்னிடம் எடுத்துக் காட்டி, “சென்னையில் ஒற்றைச் சம்பளத்தில் வாழ்வது கட்டுபடி ஆகாது. நான் சொந்த ஊருக்கே போய் விடவா?”
என்றார்.
இருவருமே இவ்வளவு சிரமத்திலும் தனியாரில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
இன்று தனியாரில் மருத்துவம் பார்ப்பது என்பது மிகுந்த முதலீடு, சட்டச் சிக்கல், மருத்துவரின் உயிருக்கே உலை வைக்கும் வேலையாக மாறி இருக்கிறது.
பெரும்பாலான அரசு மருத்துவர்கள் முதல் தலைமுறை மருத்துவர்கள். அரசு மருத்துவப் பணியை முடித்து நிம்மதியாக வீட்டுக்கு வந்து உறங்கினாலே போதும் என்றிருப்பவர்கள்.
அடுத்த முறை அரசு மருத்துவர்கள் மற்ற மாநில, துறை ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் இதர உரிமைகள் கேட்டுப் போராடும் போது, அவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்