தெரியாத ஊருக்குப் போகிறீர்கள்.
ஆட்டோ / taxi ஓட்டுநர் கொள்ளைக் காசு கேட்பதாகத் தோன்றுகிறது.
உடனே Google Maps பார்க்கிறீர்கள்.
ஓ, இந்த இடத்தில் இருந்து நான் போக வேண்டிய இடம் இவ்வளவு தொலைவில் இருக்கிறதா?
சரி, கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று வைத்துக் கொண்டாலும் இவர் கேட்பது நியாயம் தான் என்று தோன்றினால் வண்டியில் ஏறுவீர்கள்.
இல்லாவிட்டால், நடையைக் கட்டுவீர்கள்.
அது போல்,
சமூக முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளை வைப்பவர்கள்,
தங்கள் கோரிக்கையின் கணக்கீட்டு அடிப்படை என்ன, ஏரணம் (logic) என்ன என்பவற்றைத் தெளிவாக முன் வைக்க வேண்டும்.
வாயில் வரும் எண்ணிக்கையைக் கேட்போம், வந்த வரைக்கும் இலாபம் என்று நினைத்தால்,
உங்கள் போராட்டத்திற்குப் பொது மக்கள் ஆதரவு கிடைக்காது.
போராட்டமும் சட்ட மன்றம், நீதி மன்றங்களில் வெல்லாது.
பார்க்க – முகநூல் உரையாடல்