பொதுவாக நம்ம ஆட்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு.
1. நாம் தவறே செய்திருக்க மாட்டோம். எதிரிக் கட்சிகள் அதைக் குற்றமாக்கும். நாம் பதிலே சொல்லாமல் இருப்போம். (ஈழம், 2G 2011)
2. அப்புறம், கொஞ்சம் முன்னேறி விளக்கம் கொடுப்போம். இது தடுப்பாட்டம். (2016)
3. காலம் போன காலத்தில் திராவிட இயக்கத்தின் அருமை புரிந்து பாராட்டிப் பேசுவோம். இது வாக்காக மாறாது. (2018. கலைஞர் மறைவுக்குப் பின்)
ஆனால், நாளும் ஆளுங்கட்சிகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பேசி அடித்து ஆடவே மாட்டோம். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணம்: நம்மைப் போல் நம் எதிரிகள் ஜனநாயகவாதிகள் அல்ல.
வழக்கு, விசாரணை என்று அலைய விடுவார்களோ நமக்கேன் வம்பு என்று பதுங்கி விடுவோம். நாம் என்றால் சாதாரண மக்கள் மட்டும் அல்ல. ஊடகங்களும் அடங்கும்.
ஆனால், தற்போது நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார மந்தநிலை என்பது அரசியலைத் தாண்டி நாட்டுக்கான பேராபத்து ஆகும்.
அன்றாடம் பொருளாதாரத்தைக் கவனித்து இதைப் பேசு பொருளாக்குவது நமது ஜனநாயகக் கடமை.
இதில் தனி நபர் தாக்குதலுக்கோ அவதூறுக்கோ இடம் இல்லை.
முற்றிலும் தரவுகள், செய்திகளின் அடிப்படையிலானது என்பதால் இதைப் பேசுவதற்குக் கூட நாம் அஞ்சக் கூடாது!
பார்க்க… முகநூல் உரையாடல்