13 ஆண்டுகள் ஆட்சி இழந்திருந்த கலைஞர்,
1989ல் ஆட்சிக்கு வருகிறார்.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு கொடுத்தார்.
ஆனால், முதலில் பெண்கள் படித்தால் தானே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்?
பத்தாம் வகுப்பு வரை பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் ஊக்கத் தொகை அறிவித்தார்.
30 கிலோ மீட்டர் சுற்றவில் பெண்கள் கல்லூரி ஏதும் இல்லை என்றால்,
அருகில் உள்ள கல்லூரிகளில் 30% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தார்.
இன்னொரு வீட்டுக்குப் போகிற பெண்ணுக்கு யார் செலவு செய்வார்கள்?
ஆகவே, பெண்களுக்குச் சொத்துரிமை தந்தார்.
இதெல்லாம் எந்தக் காலத்தில்?
அறிவொளி இயக்கம் நடத்தி பெண்களுக்குச் சைக்கிள் ஓட்டவே பயிற்சி தந்து கொண்டிருந்த காலத்தில்!
இந்த ஆட்சியைத் தான் இரண்டே ஆண்டுகளில் கலைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இன்று உலகிலேயே ஆக அதிகமாக,
தமிழ்நாட்டில் 49% பேர் கல்லூரிப் படிப்பிறக்குச் செல்கிறார்கள். இதில் சரி பாதி பெண்கள்.
இந்தச் சமூக முன்னேற்றம் 1989 கலைஞர் ஆட்சியில் விதைக்கப்பட்டது.
இந்த வரலாற்றை எல்லாம் படிக்கிற போது,
திமுக மட்டும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆண்டிருந்தால்,
தமிழ்நாட்டின் வளர்ச்சி எந்த அளவுக்குச் சென்று இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தமிழ்நாடு வளரக்கூடாது என்று நினைப்பவன் தான்
திமுக அழிய வேண்டும் என்று நினைப்பான்.
பார்க்க – முகநூல் உரையாடல்