YG மதுவந்தி தான் பிறந்த சாதிக்குத் துப்புரவுப் பணி செய்யும் உடல் வாகு இல்லை என்று சொல்லும் போது நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது?
அதே போல், பெண்கள் மட்டும் என்ன, தாங்கள் தான் வீட்டு வேலை, சமையல் செய்வோம் என்று வரம் வாங்கிக் கொண்டு பிறந்தார்களா, என்ன?
ஒரு பெண் எவ்வளவு தான் படித்திருந்தாலும், முழு நேரம் வேலைக்குப் போனாலும்,
ஞாயிறு ஓய்வு நாமும் வீட்டில் இருந்தாலும்,
சமையலையும் வீட்டு வேலையையும் எப்போதும் அவளே செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆணாதிக்கம் இன்றி வேறு என்ன?
7 கழுதை வயசானாலும் எனக்கு சமைக்க வராது, தெரியாது என்று சமையல் கற்றுக் கொள்ளாமல், சமைக்காமல், வீட்டு வேலைகளுக்கு உதவாமல்,
அம்மா, அக்கா/தங்கை, மனைவி, மகளை வேலை வாங்கும் அனைத்து ஆண்களும் ஆணாதிக்கவாதிகளே!
இவர்களுள் ஒருவர் கூட தன்னைப் பெரியாரியவாதி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி இல்லாதவர்.
பார்க்க… முகநூல் உரையாடல்