கன்றை இழந்த பசுவுக்கு ஈடாக தன் மகனையே கொல்ல ஆணையிட்டான் மனுநீதிச் சோழன் என்கிறார்கள்.
ஒரு உயிர் போனதற்கு நட்ட ஈடும் தண்டனையும் வழங்கினால் போன உயிர் திரும்ப வருமா என்கிறார்கள்.
நீங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கல்வியும் மானமுள்ள வேலையும் மறுத்ததற்கு நீதியாக,
உங்களைப்
படிக்கக் கூடாது என்றோ
சிறந்த வேலைகளுக்குச் செல்லக்கூடாது என்றோ
கீழான வேலைகளைச் செய் என்றோ
உரிமைகளைப் பறித்தோமா?
அதே கல்வியையையும் வேலையையும் தாருங்கள் என்று எங்கள் உரிமைகளைத் தானே கேட்கிறோம்.
இந்த நீதியில் எங்கிருந்து வந்தது தகுதி, திறமை, தரம் எல்லாம்?
பார்க்க – முகநூல் உரையாடல்