• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / நீட் வந்த பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் உயர்ந்துள்ளது.

நீட் வந்த பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் உயர்ந்துள்ளது.

July 14, 2019


நீட் வந்த பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் உயர்ந்துள்ளது.

அரசு கல்லூரிகளில் இருந்த இடங்களையும் 2,3 ஆண்டுகள் நீட் கோச்சிங் போக வசதியுள்ளவர்கள் அள்ளிப்போகிறார்கள்.

ஏழை மாணவர்கள் நடுத்தெருவில்.

இவ்வளவு செலவு செய்து படிக்கும் பணக்காரர்கள் அரசுப் பணிக்கோ ஏழைகளுக்குச் சேவை செய்யவோ வர மாட்டார்கள்.

அரசு மருத்துவமனைகள் செயலிழக்கும்.

தனியார் மருத்துவமனைகள் கொழிக்கும்.

நம் பிள்ளைகள் காலத்தில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும்,

மிகப் பெரிய பொது சுகாதாரப் பேரிடர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டிருகிறது மோடி அரசு!

**

முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு முறை இருந்தது.

பணம் இருந்து மருத்துவம் படிக்க விரும்புகிறவர்களிடம் மிக அதிக பணத்தை வாங்கி கல்லூரி நடத்தினர், அதில் 50% இடத்தை அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களிடம் கட்டுபடியாகும் விலையில் கட்டணம் வாங்கினர்.

சங்கிகள் நீட் வந்தால் தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் குறையும் என்று பிரச்சாரம் செய்தார்கள்.

சொன்னது போலவே கட்டணம் குறைந்தது, ஆனால் அது பணக்காரர்களிடம் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் கட்டுபவர்களுக்கு மட்டும் குறைந்தது, அவர்களுக்கு குறைத்த அந்த பணத்தை அரசு ஒதுக்கீட்டில் கவுன்சிலிங் மூலம் வந்தவர்கள் தலையில் கட்டினர். அதாவது முன்பு இருந்ததைவிட நான்கு மடங்கு கட்டணம்.

அடுத்து முன்பு நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த பலர் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படித்தனர், ஆனால் இப்பொழுது வருடம் 18 லட்சம் என்பது நினைத்துப் பார்க்க முடியாத பணம் என்பதால் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மறைமுகமாக பணக்காரர்களுக்கு மட்டுமே செல்கிறது.

ஆனால் இந்த போலிக் கல்வியாளர்கள் என்ன சொன்னார்கள்? நீட் தேர்வு வந்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று. இப்பொழுது நடப்பதென்ன? கிட்டத்தட்ட ஒருவருக்கு கூட வாய்ப்பில்லாமல் போகிறது.

போலி இருப்பிடச்சான்றிதழ்மூலம் சர்மாக்களும் பாண்டேக்களும் நமது இடங்களை பறித்துச் செல்கிறார்கள்.

எழுதியவர் – Karthick Ramasamy

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், நீட்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2218