நீட் தேர்ச்சி விகிதம் குறித்து இந்த சன் டிவி செய்தி Viralஆக சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்தத் தகவல் பிழை.
நீட் தேர்வு என்பது Percentile அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.
அதாவது, நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் Top 50% மாணவர்களில் கடைசி ஆள் எடுத்த மதிப்பெண் தான் General Category Just pass மதிப்பெண் ஆகக் கொள்ளப்படும். இந்த ஆள் 720க்கு 10 மதிப்பெண் பெற்றாலும் அது தான் Just pass. இந்த ஆண்டு இந்த Just pass மதிப்பெண் என்பது 134.
இங்கு Just pass என்ற சொல்லாடல் முக்கியம். ஏன் எனில் இதைக் cut off என்று நினைத்துப் பலர் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். Just pass என்பது படிப்பில் Passஆ failஆ என்பதைச் சுட்டும். Cut off என்பது கல்லூரியில் இடம் கிடைக்க எத்தனை மதிப்பெண் வேண்டும் என்பதைச் சுட்டும்
இந்த Just pass மதிப்பெண் மற்ற சாதிகளுக்குத் தளர்த்தப்படுகிறது. இப்படி Grace mark பெற்று தேர்வானவர்கள் எண்ணிக்கை மட்டும் தான் சன் டிவி செய்தியில் காட்டப்படுகிறது. ஆனால், அதை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் அனைத்துச் சாதிகளில் இருந்தும் தேர்வாகி உள்ளார்கள்.
ஆனால், என்ன கொடுமை என்றால், எத்தனைப் பேர் தேர்வானார்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. கடைசியில் எத்தனைப் பேருக்கு இடம் கிடைக்கிறது என்பது தான் விசயம்.
Top 50 இடங்களில் 43 பேர் முன்னேறிய சாதியினர் தான். SC/ST ஒருவர் கூட இல்லை. OBC 7 பேர் தான். அதில் ஒருவர் தான் பெண். இதே போக்கு தான் தரவரிசைப் பட்டியல் முழுக்க எதிரொலிக்கும்.
CBSE படித்து கோச்சிங் போக வசதி பெற்று வீட்டில் அமர்ந்து 3 ஆண்டுகள் படித்த மாணவர்கள் தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரி இடங்களைச் சுருட்டிக் கொண்டு போய் விடுவார்கள். மற்றவர்கள் புதிதாகத் திறந்த ஏதாவது ஒரு கல்லூரியில் வேண்டா வெறுப்பாக இடங்களைப் பெற்றுக் கொள்ள நேரிடும்.
நீட் OBC, SC, ST மக்களுக்கு, பெண்களுக்கு எதிரானது என்பதில் ஒரு ஐயமும் இல்லை. ஆனால், அதைச் சரியான தரவுகளுடன் புரிதலுடன் பேச வேண்டும்.