நான் ஏன் திமுகவை ஆதரிக்கிறேன்?
* இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உரிமை தந்தது திமுக (1989-1991)
* அரசுப் பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தது திமுக (1989-1991)
* உள்ளூராட்சிப் பொறுப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தந்தது திமுக (1996-2001)
* இந்தியாவிலேயே முதன் முறையாக காவல் துறையில் பெண்களைச் சேர்த்தது திமுக (1974)
* பெண்கள் படிப்பறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் படித்த பெண்களுக்கு மட்டுமே திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வந்தது திமுக (1989-1991)
* இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கையருக்கு என நலவாரியம் அமைத்தது திமுக (2006-2011)
* பாலினம் மாறியோருக்கான உரிமைச் சட்டத்தை ஒற்றை ஆளாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது திமுக (2016)
* அடுப்பூதிப் பெண்கள் நோய் வாய்ப்பட வேண்டாம் என இலவச எரிவாயு அடுப்புத் திட்டம் தந்தது திமுக (2006 – 2011)
சாதி, மதம், இனம், வர்க்கம் மட்டுமல்ல பாலினத்தாலும் மனிதர்கள் ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதை மாற்றும் சமூக நீதிக் கொள்கையும் அதற்காக திட்டங்களும் சட்டங்களும் கொண்ட ஒரே கட்சி திமுக.
பார்க்க… முகநூல் உரையாடல்