• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விடாமல் ஏன் இட ஒதுக்கீடு பற்றி எழுதுகிறீர்கள்?

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விடாமல் ஏன் இட ஒதுக்கீடு பற்றி எழுதுகிறீர்கள்?

August 13, 2019

கேள்வி: நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விடாமல் ஏன் இட ஒதுக்கீடு பற்றி எழுதுகிறீர்கள்?

பதில்:

ஆளானப்பட்ட Avengers Supermanஆக இருந்தாலும் கூட ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை, ஆளுக்கு ஒரு கிரகம் என்று பிரித்துத் தான் சண்டை போடுகிறார்கள்.

நடப்பது ஆரிய திராவிடப் போர்.

இதில் பல போர் முனைகள் உள்ளன.

ஒரு ஆள் ஒரு நேரத்தில் ஒரு களத்தில் போராடுவது தான் புத்திசாலித்தனம்.

இந்தியப் பொருளாதாரம் அதளபாதாளத்தில் இருக்கிறது. அதில் இருந்து திசை திருப்ப காஷ்மீர் விவகாரத்தைக் கிளப்பி இருக்கிறார்கள்.

அன்றாடம் ஒரு புதுப் பிரச்சினையைக் கிளப்பி விடுகிறார்கள்.

ஒவ்வொரும் நாளும் அதற்கு Status போட்டமா, Like வாங்கினமா என்று இருப்பதால் ஒரு பயனும் இல்லை.

மிக எளிமையாக நம்மை திசை திருப்பி, கவனம் இழக்கச் செய்து வீழ்த்தி விடுவார்கள்.

இது போல் மாநில சுயாட்சி, காவிரி, வேளாண்மை, பாராளுமன்ற நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம், வெளியறவு என்று நாம் கவனம் செலுத்த வேண்டிய புலங்கள் ஏராளம் உள்ளன.

அரக்கர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும். அத்துறைகளில் கருத்துருவாக்கம் செய்யும் வல்லவர்களாக மாற வேண்டும்.

மற்ற பிரச்சினைகளின் போது பந்து வீசுபவர் முனையில் உள்ள Batsman போல் அமைதி காக்க வேண்டும்.

நாடு போகிற போக்கில் நமக்கு இரத்த அழுத்தம் கூடாமல், பைத்தியம் பிடிக்காமல் தொடர்ந்து நமக்கான ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ள இது ஒன்றே வழி!

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2423