பதில்:
நான் வேலை பார்த்த அமெரிக்க நிறுவனத்தில் CEO உட்பட 300 பணியாளர்களும் அமெரிக்க அதிபர் தேர்தலில் Clinton ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அது முதிர்ச்சியான மக்களாட்சி.
இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், இராணுவத் தளபதிகள் கூட வலதுசாரி அரசியல் கருத்துகளைப் பரப்பி ஓய்வு பெற்ற பிறகு கூசாமல் அரசுப் பதவிகளைப் பெற்றுக் கொள்கிறர்கள்.
ஆனால், திராவிடம் மட்டும் ஏதோ தீண்டத்தகாத ஒரு கொள்கை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், திராவிட அரசியலைத் தனிமைப்படுத்துகிறார்கள்.
திராவிட அரசியலை வலுப்படுத்த நமக்கு இப்போது தேவை நடுநிலைப் புடலைங்காய் அல்ல. சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள் வெளிப்படையாகவே தங்கள் திராவிடச் சார்பை அறிவிக்க வேண்டும்.
அப்போது தான் பொது மக்களுக்குத் திராவிடத்தின் மீது நம்பிக்கை வரும்.
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற Karthikeya Sivasenapathy போன்றவர்கள் வெளிப்படையாகவே திராவிடத்தை ஆதரித்து எழுதுவது எல்லாம் சங்கிகளைத் தூங்கவும் விடாமல் சிறுநீர்ப் பாசனமும் செய்ய முடியாமல் குமையச் செய்ய வல்லன.
நடுநிலையாக இருந்தால் நீங்கள் வெற்றி பெறலாம் என்று ஆசை காட்டுவதே உங்களை அரசியலற்று இருக்கச் செய்யும் வலது சாரி அரசியல் தான்.
சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்! #திராவிடம்