• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின

திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின

November 8, 2018

திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின, திராவிடச் சித்தாந்தம் என்பது எப்படி மக்களை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை உண்மையிலேயே அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் Dravidian Years: Politics and Welfare in Tamilnadu. எழுதியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ். நாராயணன்.

**

தமிழ்நாட்டில் சமூக நலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் சி.என். அண்ணாதுரை மாற்றினார். அதுவரை திட்டங்கள் மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கி செயல்படுத்தப்படுவது வழக்கம்.

அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான் கீழிருந்து மேல் நோக்கி திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது என்கிறார் அவர்.
1969ல் மு. கருணாநிதி முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மாறியது. பிரச்சனைகளை அதிகாரிகள் கண்டறிந்து தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் பிரச்சனைகளைச் சொன்னால், அதிகாரவர்க்கம் அதற்கு காதுகொடுக்க வேண்டியிருந்தது.

1960களில் துவங்கி 80களுக்குள் பெரிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரிகளானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமங்களின் பிரச்சனைகளை அறிந்தவர்கள்.

1975க்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. அரிசிக்காக துவங்கப்பட்ட இந்த முறையின் மூலம் சர்க்கரை, மண்ணெண்ணையும் வழங்கப்பட்டன. 1972ல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. இந்த கார்டை வைத்தே, கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவையும் வழங்கப்படுகிறன. அரசின் பல நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ரேஷன் கார்டுகளுக்காக அடிதடியில் ஈடுபட்ட காலம் மாறி, வருவாய்க்கேற்றபடி வெவ்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள், பொருட்களே வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் வரை வந்துவிட்டது. மக்கள் தொகையின் பெரும் பகுதி அரசி வாங்க ரேஷன் கடைகளைச் சார்ந்திருந்த காலம் மாறியிருக்கிறது.

1970க்கும் 76க்கும் இடையில் மாநிலத்தின் உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்தது. தனிநபர் வருவாய் 30 சதவீதம் அதிகரித்தது. 1971ல் 39.5 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 1981ல் 54.4 சதவீதமாக மாறியது. 1971ல் 125ஆக இருந்த சிசு இறப்பு விகிதம் 77ல் 103ஆகக் குறைந்தது. வறண்ட நிலங்களுக்கு நில வரி ஒழிக்கப்பட்டது. 1974ல் கொண்டுவரப்பட்ட சட்டம், பரம்பரைக் கர்ணம் முறையை ஒழித்தது. இதையெல்லாம் இடஒதுக்கீட்டை வைத்து, தகுதியில்லாமல் வேலைக்குச் சேர்ந்தவர்களே செய்தார்கள்.

எழுதியவர் – Muralidharan Kasi Viswanathan

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1689