• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / திராவிடக் கட்சிகளின் கொள்கை பிடித்து இருக்கிறது. ஆனால், ஊழல் உறுத்தலாக உள்ளதே?

திராவிடக் கட்சிகளின் கொள்கை பிடித்து இருக்கிறது. ஆனால், ஊழல் உறுத்தலாக உள்ளதே?

November 15, 2018

கேள்வி: திராவிடக் கட்சிகளின் கொள்கை பிடித்து இருக்கிறது. ஆனால், ஊழல் உறுத்தலாக உள்ளதே?

பதில்:

கருப்பர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி விடுதலை பெற்று ஒரு ஆட்சியை அமைக்கிறார்கள்.

கருப்பர் ஆட்சியில் திருட்டு, இலஞ்சம் போன்ற குற்றங்கள் பெருகினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் போதும்.

அதை விடுத்து கருப்பர் ஆட்சியால் வீழ்ந்தோம் என்பது மீண்டும் வெள்ளையர் அடிமைத்தனம் தலையெடுக்க வேண்டும் என்று எண்ணுவோரின் வாதமே ஆகும்.

அதே போல் தான் திராவிடமும்.

ஆட்சி, அதிகாரம் என்பதே எப்போதும் யாரை யார் ஆள்வது என்பது தொடர்பானது தான்.

திராவிடர்களைத் திராவிடர்களே ஆள வேண்டும். அவர்கள் சாதி, மதத்தால் அடிமைப்படாமல் படிப்பு, வேலைவாய்ப்பு பெற்று யாருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வாழ வேண்டும் என்பது தான் திராவிடப் புரட்சியின் குறிக்கோள்.

திராவிடக் கட்சிகள் இந்தக் கொள்கைக்கு உண்மையாக இருக்கும் வரை அவற்றை ஆதரிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடம் என்பது ஊழலை ஒழிக்க வந்த அரசியல் சித்தாந்தம் அல்ல.

யாராவது ஊழலை ஒழிப்பதற்காக கட்சி தொடங்குவதாக, ஆட்சிக்கு வருவதாகச் சொன்னால் அவர்கள் ஒன்னாம் நம்பர் டுபாக்கூர் என்று அறிந்து கொள்க.

ஊழல் இல்லாத நாட்டில் அடிமையாக வாழ்வதை விட ஊழல் மலிந்த நாட்டில் நாம் தன்மானத்துடன் வாழ்வது மேல்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1798