உழவர் சந்தை, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகங்கள் போன்றவை எல்லாம் திட்டங்கள்.
அடுத்த கட்சி ஆட்சி வரும் போது காழ்ப்புணர்வின் காரணமாக முடக்கப்படக் கூடும்.
ஒரு கட்சி தானே கொண்டு வந்த நல்ல திட்டம் என்றாலும் அரசிடம் காசு இல்லை என்றாலும் முடங்கக் கூடும்.
ஆனால், இந்தச் சட்டம் இருக்கிறதே சட்டம்!
அது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சென்றாலும் நின்று விளையாடும்!
நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சட்டங்கள் யாவற்றையும் திமுகவின் அண்ணாவும் கலைஞரும் பார்த்துப் பார்த்து இயற்றி இருக்கிறார்கள்.
வேறு முதல்வர்கள் ஆட்சியில் அப்படி ஏதும் தேடினாலும் கிடைக்கவில்லை.
மக்கள் இயற்றிய சட்டங்களின் ஆட்சி தான் மக்களாட்சி!
ஆகவே தான் அண்ணா சொன்னார்:
“நான் செய்த மாற்றங்களில் கை வைத்தால் மக்கள் வெகுண்டு எழுதுவார்கள் என்று அச்சம் எழுகிறது அல்லவா?
அந்த அச்சம் இருக்கும் வரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்”
பார்க்க – முகநூல் உரையாடல்